Amicable solution reached with DELL NTT DATA management after FITE intervention on a IT employee’s complaint

Amicable solution reached with DELL NTT DATA management after FITE intervention on a IT employee’s complaint
    On January 3, 2017, Dell NTT Data, Chennai, employee filed a complaint with the FITE-Tamilnadu union. He reported that he was terminated from employment in the first week of November 2017 and even after 2 months of time, he could not get his final settlement amount including 3 months incentive and service certificate. As he could not submit his service certificate, he is unable to get into any other employment. After verifying his complaint to the extent possible, we advised the employee to contact HR and other concerned authorities to obtain his dues and experience certificate. Almost three weeks after the employee’s various attempts and failing to obtain any fruitful result, the FITE union decided to intervene directly and sent a letter to the management regarding the employee’s complaint. We also tried to meet the Human Resources Manager directly.
While the HR Manager refused to meet, he accepted the intervention of the registered union FITE and promised to settle the problem of the employee immediately. As promised, on February 1, 2018, all the due amount and experience certificates were given to the employee.
The FITE union feels satisfied and welcomes the Dell management approach of engaging the union in resolving employees problems and fixing it immediately.
Other IT companies should follow the DELL management approach to deal the employees fair demands without engaging in unfair practices against labor interests including illegally forced resignations. FITE union wishes that the IT companies engage the trade unions who are the representatives of the employees and solve the problems in an amicable way.
கடந்த சனவரி 3,2018 அன்று டெல் என்டீடீ டேட்டா(DELL NTT DATA),சென்னையில் பணிபுரிந்த தொழிலாளர் ஒருவர் பைட் சங்கத்தில் ஓர் புகார் அளித்தார். நவம்பர் முதல் வாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட அவருக்கு சேர வேண்டிய சம்பளம் உள்ளிட்ட நிலுவைத்தொகை, ஊக்க தொகை, அனுபவ சான்றிதழ் போன்றவை இரண்டு மாதம் காலம் கடந்தும் இன்னும் கிடைக்க வில்லை என்றும், பல்வேறு வகையில் நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டும் அவற்றை பெற முடியவில்லை என்றும் கூறி,அனுபவ சான்றிதழ் இல்லாத காரணத்தால் தன்னால் வேறு பணியில் சேர முடியவில்லை என்று கூறி இருந்தார். அவரின் புகாரை முடிந்தவரை சரிபார்த்த பின்னர், அவரின் நிலுவை தொகை மற்றும் அனுபவ சான்றிதழை பெற மனிதவள அலுவலர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளச் சொல்லி அறிவுறுத்தி இருந்தோம். ஏறக்குறைய 3 வாரங்கள் தொழிலாளர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்காத நிலையில், பைட் சங்கம் நேரிடையாக தலையிட முடிவு செய்து தொழிலாளரின் புகார் குறித்து நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியது. மனிதவள மேலாளரை நேரிடையாகச் சந்திக்கவும் முயற்சி செய்தது.
மனிதவள மேலாளர் நேரிடையாகச் சந்திக்க மறுத்த போதும், பதிவு செய்யப்பட்ட பைட் சங்கத்தின் தலையீட்டை மறுக்காது ஏற்றுக்கொண்டு தொழிலாளரின் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பதாக தொலைபேசியில் உறுதி அளித்தார். அவர் உறுதியளித்தபடி பிப்ரவரி 1,2018 அன்றே தொழிலாளருக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை மற்றும் அனுபவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஐ.டி தொழிலாளர்களின் முதல் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமான பைட் சங்கத்தின் தலையீட்டை மறுக்காது ஏற்றுக்கொண்டு தொழிலாளர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைத்த டெல் நிர்வாகத்தின் அணுகுமுறையை பைட் சங்கம் வரவேற்கிறது. மற்ற
ஐ.டி நிறுவனங்களும் தொழிலாளர்களை மிரட்டி செய்யப்படும் சட்ட விரோத பணிநீக்கங்கள் உள்ளிட்ட தொழிலாளர் நலனுக்கு எதிராக செயல்களில் ஈடுபடாது தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை சுமுகமாக பேசித் தீர்க்க டெல் நிர்வாகத்தின் அணுமுறையை பின்பற்ற வேண்டும். தொழிலாளர்களின் பிரதிநிதியான தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க வேண்டும் என பைட் சங்கம் ஐ.டி நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறது.