“Present crisis in IT Industry and way forward” – IT Workers Conference, 17th and 18th June, 2017, International Institute of Tamil Studies,C.P.T Campus,Taramani,Chennai

“Present crisis in IT Industry and way forward” – IT Workers Conference,  17th and 18th June, 2017, International Institute of Tamil Studies,C.P.T Campus,Taramani,Chennai

https://www.facebook.com/events/308309349631545/

Indian IT Industry is undergoing a significant structural change. Companies are shifting from labour intensive business model. The business model ensures generation of more revenue with fewer work force. This has become reality because of the technology advancement like cloud computing and automation of low skilled jobs. This is evident from the increasing revenue growth and declining hiring rate of companies for the past few years. Adding to this woe, the economic crisis in developed countries and increasing restrictions on temporary work permits, increasing competition for the low cost position of India are also playing important role. So, mass job cuts in next few years is real one, it is not a hype as said by our Central IT Minister Ravi Shankar Prasad, a loyal to corporates.  It is to be noted that out of 20-25% of workforce reduction ie around 10 lakhs job cuts is planned in next 3 years as per NASSCOM statement itself.

While the truth behind the mass job cut is different, we are branded as ‘poor performers’ and forced to resign. While our labour laws do not allow termination on the basis of performance, how companies are openly stating that this is as part of usual annual appraisal process? But we are made to believe forced resignation a usual one because we think we can find alternative job. And also, we are made to believe that we are not workers, and industry with around 40 lakhs workforce now has not been allowed to form unions for last 25 years! Workers basic right of unionization is denied completely.

When one person gets job in IT Industry, indirectly 5 people gets employment. So, if such a mass job cut happens, it will have huge impact on the economic activities happening in and around IT Corridors. So, who is going to take responsibility for this mass job cuts and its impact on overall economy? When the corporates wanted more workforce, government encouraged opening of many engineering colleges. So, now who is responsible to provide the employment opportunity for the lakhs and lakhs of engineers produced by the colleges opened to satisfy the needs of the IT sector? Let us remember the historical moment of the birth of FITE, which stopped the mass illegal termination of 25,000 employees of TCS in the year 2014 with the collective resistance of employees.

This conference is to discuss the present crisis and come up with the IT workers demand charter and emphasize the central government to intervene positively on this issue. IT Workers, Trade Unions, Legal Experts from Delhi, Mumbai,Kolkatta,Bengaluru, Hydrabad and Chennai are coming together to discuss on 17th June in delegates conference.

Concluding Session – 18th June,2017, 4 PM

Presided by Parimala, President,FITE,TamilNadu

Introduction by Sathish, General Secretary, FITE,TamilNadu

Guest Speakers

Justice Hariparanthaman (Retd)

Madras High Court

Comrade Sanjay Singhvi

General Secretary, Trade Union Centre of India (TUCI)

Comrade C.P.Krishnan, General Secretary, BEFI-TamilNadu

Comrade J.Chidambaranathan

Hon. President, Democratic Trade Union Centre (DTUC)

’ஐ.டி துறையில் தற்போது நிலவும் நெருக்கடி – தீர்வை நோக்கி’ – ஐ.டி தொழிலாளர்கள் மாநாடு

17,18 ஜுன்,2017, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சி.பி.டி வளாகம்,தரமணி,சென்னை

இந்திய ஐ.டி துறை கட்டமைப்பு அடிப்படையிலான ஒரு முக்கிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. நிறுவனங்கள் அதிக தொழிலாளர்கள் தேவைப்படும்  உற்பத்தி முறையிலிருந்து குறைந்த தொழிலாளர்கள் தேவைப்படும் முறைக்கு மாறிவருகின்றன. இந்த முறையானது முன்னேறிய தொழில் நுட்பத்தில் அதிகம் முதலீடு செய்து குறைந்த தொழிலாளர்களை கொண்டு அதிக வருமானத்தை ஈட்டுவதை உறுதி செய்கின்றன. இவை கிளவுட் கம்புயூட்டிங் போன்ற புதிய தொழில் நுட்பங்களாலும், குறைந்த திறன் தேவைப்படும் வேலைகளை ஆட்டோமேஷன் செய்வதன் மூலமும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைத்து அதிக வருமானம் ஈட்டுவதை சாத்தியம் ஆக்கியிருக்கிறது. நிறுவனங்களின் கடந்த ஆண்டுகளின் அறிக்கைகளைப் பார்க்கும் போது அதிகரித்து வரும் வருமானமும் வீதமும் ,குறைந்து கொண்டே வரும் ஆள் சேர்ப்பு வீதமும் இதை உறுதி செய்கிறது. இதனுடன் சேர்த்து, வளர்ந்த் நாடுகளில் உள்ள பொருளாதார மந்த நிலையால் தற்காலிக பணிக்காக வெளி நாடு செல்பவர்களுக்கு அதிகரித்து இருக்கும் கட்டுப்பாடுகள், இந்தியாவை விட குறைந்த செலவில் தொழில் நடத்த அனுமதி வழங்க மூன்றாம் உலக நாடுகளில் அதிகரித்து இருக்கும் போட்டி போன்றவை ஐ.டி துறை சிக்கலை அதிகமாக்கி இருக்கிறது. எனவே வரும் காலங்களில் அதிக எண்ணிக்கையில் ஐ.டி துறை தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திக்க போவது உறுதியாகிறது. இது நமது மத்திய அமைச்சர் கார்பொரேட் விசுவாசி ரவி சங்கர் ப்ரசாத் சொல்வது போன்று மிகைப்படுத்தப்பட்ட தகவல் அல்ல. அடுத்த மூன்று வருடங்களில் துறையில் உள்ள 40 லட்சம் தொழிலாளர்களில் 20-25% ஏறக்குறைய 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திப்பார்கள் என்று நாஸ்காம் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஐ.டி துறை தொழிலாளர்கள் சந்தித்து கொண்டு இருக்கும் வேலை இழப்புக்கு உண்மையான காரணங்கள் வேறாக இருக்கும் போது, நம்மை ’செயல்திறன் குறைந்தவர்கள்’ என முத்திரை குத்தப்பட்டு, மிரட்டப்பட்டு,கட்டாயப்படுத்தப்பட்டு, நிருவனங்களை விட்டு வெளியேற்றப்படுகிறோம். நமது தொழிலாளர் சட்டங்கள் ’செயல்திறன்’ அடிப்படையில் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய அனுமதிக்காத போது, இந்திய ஐ.டி நிறுவனங்கள் ‘செயல்திறன்’ அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் நடைபெரும் ’வழக்கமான ஆட்குறைப்பு நடவடிக்கை தான்’ என வெளிப்படையாக எப்படி அறிவிக்கின்றன? ஆனால், ‘கட்டாயப்படுத்தப்பட்ட பணி விலகலை’ வழக்கமான ஒன்றாகவும், வேறு நல்ல வேலையை தேடிக்கொள்ளலாம் என்பதாக நாம் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறோம். மேலும், நாம் எல்லோரும் தொழிலாளர்களே அல்ல என நம்பச் செய்யப்பட்டு இருக்கிறோம். 40 லட்சம் தொழிலாளர்கள் உள்ள இந்தத் துறையில் ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக நாம் தொழிற்சங்கமாக ஒன்றிணைய அனுமதிக்கப்படவில்லை. நமது அடிப்படை உரிமையான ’சங்கமாதல்’ என்பது கூட மறுக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஐ.டி துறையில் ஒருவருக்கு வேலை கிடைக்கிறதென்றால், மறைமுகமாக 5 பேர் வேலை பெறுகிறார்கள்.எனவே, பெருமளவிலான ஆட்குறைப்பு என்பது ஐ.டி நிறுவனங்கள் உள்ள பகுதிகளைச் சுற்றி நடக்கும் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையுமே பெரிய அளவில் பாதிக்கும் செயலாகும். எனவே இந்தப் பெருமளவிலான ஆட்குறைப்பிற்கும் அது ஏற்படுத்தப் போகும் பொருளாதார பாதிப்புக்கும் பொறுப்பேற்கப்போவது யார்? நிறுவனங்களுக்கு அதிக தொழிலாளர்கள் தேவைப்பட்ட போது, அரசு அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் தொடங்க ஊக்குவித்தது.இன்றைய சிக்கலான சூழலில், ஐ.டி துறையின் தேவைக்காக உருவாக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளின் வேலை வாய்ப்புக்கு பொறுப்பு ஏற்கப் போவது யார்? 2014 ஆம் ஆண்டில் 25,000 டிசிஎஸ் தொழிலாளர்கள் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட இருந்ததை தொழிலாளர்களின் கூட்டு எதிர்ப்பின் மூலம் முறியடித்து ஃபைட் என்ற தொழிற்சங்கம் பிறந்த வரலாற்றை நாம் இப்போது நினைவில் கொள்வோம்.

இந்த மாநாடு என்பது நமது துறை இன்று சந்திக்கின்ற பிரச்சினை பற்றி ஆழமாக விவாதிக்கவும், ஐ.டி துறை தொழிலாளர்களுக்கான கோரிக்கைகள் வரைவை முன்மொழியவும், அதைக் கொண்டு ஐ.டி தொழிலாளர்கள் பிரச்சினையில் மத்திய அரசை ஒரு நேர்மறையான தலையீடு செய்ய வலியுறுத்தும் பொருட்டு நடைபெறுகிறது. டெல்லி,மும்பை,கொல்கத்தா,ஹைதிராபாத்,பெங்களூரு, மற்றும் சென்னையிலிருந்து ஐ.டி தொழிலாளர்கள்,தொழிற்சங்கங்கள்,சட்ட வல்லுனர்கள் 17 ஜுன் அன்று பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள்.

நிறைவு நாள் கருத்தரங்கம் 18, ஜுன்,2017,4 மணி

தலைமை பரிமளா, தலைவர், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் மன்றம் – தமிழ் நாடு(FITE – TN)

அறிமுக உரை சதீஸ், பொதுச் செயலர், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் மன்றம் – தமிழ் நாடு(FITE-TN)

சிறப்பு பேச்சாளர்கள்

மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன், மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

தோழர் சஞ்சய் சிங்வி

பொதுச் செயலர், இந்திய தொழிற்சங்க மையம்(TUCI)

தோழர் சி.பி கிருஷ்ணன், பொதுச் செயலர், பெஃபி – தமிழ் நாடு(BEFI – TN)

தோழர் ஜெ. சிதம்பர நாதன்

கவுரவ தலைவர், ஜனநாயக தொழிற்சங்க மையம்()

WorkersConferencePamphlet2017