ஐ.டி. ஊழியர்களின் பிரச்னைகள் , 14 Apr ,2017

* ஆட்குறைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்வது அதிகரித்திருக்கிறது. நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்காக automated ஆக மாறிக் கொண்டிருக்கின்றன. இதனால், ஒரு மேனேஜர் செய்கிற பணியினை தொழில்நுட்பம் மூலமே செய்து ஆட்குறைப்பு செய்கிறார்கள்.

* Annual Performance Appraisal என்ற திறன் மதிப்பிடும் முறையினை நிறுவனங்கள் கையாள்கின்றன. இதனால், பெட்டர் பெர்ஃபாமன்ஸ் இருந்தாலும் சரியில்லை எனக் காரணம் சொல்லி ஊழியர்களை வெளியேற்றுகின்றன.

* இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க சங்கம் தேவை. அதை அமைக்கும் உரிமையை நிறுவனங்கள் மறுக்கின்றன. ஊழியர்களும் வேலையைவிட்டு தூக்கினால் ஏதாவது பிசினஸ் செய்யலாம் என்ற மனநிலையிலே உள்ளனர். உள்ளிருந்து போராடலாம் என யாரும் முன்வருவதில்லை.

* பெண்களுக்கு திருமணம், குழந்தைப் பிறப்பு போன்றவற்றால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. நிறுவனங்களும் அவர்களை வேலையைவிட்டு விலகும் சூழலுக்கு தள்ளிவிடுகின்றன.

* ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் என்றாலும் வேலை செய்ய வேண்டும். வார இறுதி நாட்களில் வந்து வேலையை முடிக்க வேண்டும் என்றாலும் கேள்வி கேட்கக் கூடாது. இருவர் செய்யும் வேலையை ஒருவரை செய்யச் சொன்னாலும் எதிர்க்க முடியாது. இதைத் தாண்டி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தால், அவரது பணிப்பாதுகாப்பு கேள்விக்குறிதான். இப்படி பணிகள் அதிகரிப்பதால் மனஅழுத்தப் பிரச்னை ஏற்படுகிறது…

– என்கிறார் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மன்றத்தின் தலைவர் பரிமளா.

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12005&id1=4&issue=20170414